ராஜபாளையத்தில் உழவர் கடன் அட்டை விவசாயிகள் பெறலாம்

ராஜபாளையம்:  ராஜபாளையம் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற்று பயனடையுமாறு வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: பிரதமரின் விவசாயிகள் கவுரவ திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் மற்றும்  தகுதியுள்ள அனைத்து  விவசாயிகளும் உழவர் கடன் அட்டை பெற  விண்ணப்பிக்கலாம்.

Advertising
Advertising

விவசாய கடன் அட்டை மூலம்  ரூ.1.60 லட்சம் வரை கடன் தொகையை எந்தவித பிணையம் இல்லாமல் பெற்றுக்கொள்வதுடன், தங்கள் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் வாங்க தேவையான தொகையை வங்கியில் உடனடி கடனாக பெற்றுக் கொள்ள முடியும். இதை பெற தேவையான ஆவணங்கள் சிட்டா(10 (1)), ஆதார், புகைப்படம், பேங்க் பாஸ் புக் ஆகியவற்றின் நகல்கள் ஆகும்.

தற்போது கடன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.  விவசாயிகள் அனைவரும் அந்தந்த உதவி வேளாண்மை  அலுவலர்களை சந்தித்து விண்ணப்பங்கள் கேட்டு பெறலாம். இதுவரை பெறாதவர்கள் தங்களது  விண்ணப்பங்களை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று, நாளை இரு தினங்களுக்குள்  காலை 10 மணி முதல் இரவு 7 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: