ராணிப்பேட்டை முத்துக்கடையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்த மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை முத்துக்கடையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதனை கலெக்டர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஸ்பி  மயில்வாகனன் முன்னிலை வகித்தார். முத்துகடையில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

இந்த பேரணியானது கிருஷ்ணகிரி டிரங்க் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எம்.எப். ரோடு, நவல்பூர், எம்.சி.டி ரோடு வழியாக சென்று மீண்டும் முத்துக்கடை பேருந்து நிலையம் வந்து நிறைவடைந்தது. இதில், வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சப்-கலெக்டர் இளம்பகவத், டிஎஸ்பி கீதா, சிஇஓ அருளரசு, வட்டாட்சியர் பாலாஜி, உதவி ஆணையர் (பொறுப்பு கலால்) தாரகேஸ்வரி, அலுவலக மேலாளர் (குற்றவியல்) பாபு, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: