திருவில்லிபுத்தூர் அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி கருநாகம்

திருவில்லிபுத்தூர்:  திருவில்லிபுத்தூர் அருகே வீட்டிற்குள் 5 அடி நீள கருநாகம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது ராஜீவ் காந்தி நகர். இங்கு இரண்டாவது தெருவில் உள்ள சாராள் என்பவரது வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கருநாகம் ஒன்று நுழைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

Advertising
Advertising

திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி ராஜமாணிக்கம் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் புகுந்த கருநாகத்தை பிடிக்க முற்பட்டனர். அப்போது அங்குமிங்கும் ஓடி வீட்டில் இருந்த மோட்டார் அறைக்குள் சென்று மறைந்துகொண்டது. சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பின்னர் கருநாகத்தை பிடித்த தீயணைப்புத் துறையினர் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கண்மாய் பகுதியில்  விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: