தகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும் : கமல்ஹாசன் கருத்து

சென்னை : தகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும் என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யத்தின் பொருளாதார திட்டத்தை வெளியிட்டு கமல்ஹாசன் உரை நிகழ்த்தி வருகிறார்.அப்போது பேசிய அவர், சிறுதொழில் முனைவோர் நம் பொருளாதாரத்தை வேகமாக வலுப்படுத்துவார்கள் என்றும் இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற மக்கள் நீதி மய்யம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.சென்னை இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெருமையை இழந்துவிட்டது என்றும் தொழில் முதலீடுகளில் தமிழகம் 12ம் இடத்தில் உள்ளது என்றும் கமல்ஹாசன் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: