×

நல்லம்பள்ளி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம்

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சாமிசெட்டிப்பட்டி, இண்டூர், லளிகம், தொப்பூர், நல்லம்பள்ளி, நாகவதிஅணை, வத்தல்மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் பதப்படுத்தப்பட்டு, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, நாகை உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். வெங்காயம் தட்டுப்பாட்டால், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 150வரை விற்பனை செய்யப்பட்டது.

பின்னர், விலை படிப்படியாக குறைந்து, தற்போது கிலோ ₹32 முதல் ₹34வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நள்ளம்பள்ளி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளிடம் நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள், கிலோ ₹20க்கும் குறைவாக வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. மேலும், வெங்காயம் சாகுபடி செய்யும் போது, விதை வெங்காயம் கிலோ 100 கொடுத்து வாங்கி வந்து விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். போதிய வருமானம் கிடைக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags : area ,Nallampalli , small onions Harvest In Nallampalli
× RELATED வாட்டி வதைக்கும்...