கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதால் அம்மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் பேருந்துகளின் கட்டணமும் உயர்வு!

கர்நாடகா: கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் அம்மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடகா அரசு பேருந்து கட்டணத்தை 12 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கர்நாடகாவை பொறுத்தவரைக்கும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இச்சுழ்நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லக்கூடிய பேருந்துகளின் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 4 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு கர்நாடகா மாநில போக்குவரத்து கழகம், அதேபோல வடமேற்கு கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம், வடகிழக்கு கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் என 4 மண்டலங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கு பேருந்து கட்டணம் 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் நாள்தோறும் சுமார் 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

சேலம் கோட்டத்தில் இருந்து மட்டுமே நாள்தோறும் 90 பேருந்துகள், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பேருந்து கட்டணமானது 5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 191 ரூபாய் என இருந்த பேருந்து கட்டணம், 196 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நான்ஸ்டாப், ஏ.சி பேருந்துகளுக்கு 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் இந்த கட்டண உயர்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Related Stories: