×

தேன்கனிக்கோட்டை அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா மலசோனை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(60), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரியம்மா(45). நாகராஜ், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்தார்.


இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி, மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், சாவித்திரியம்மாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக, நாகராஜின் மகன் மாரப்பா(22) தேன்கனிக்கோட்டை போலீசில் புகாரளித்தார்.


 அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மனைவியை கொலை செய்த நாகராஜூக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை வேலூர் மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.


Tags : Thenkanikottai , Near Thenkanikottai Husband who killed his wife sentenced to life imprisonment
× RELATED சுத்தியலால் அடித்து மனைவி படுகொலை: கணவன் கைது