திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலையில் கொடிப்பட்டம் வீதிஉலா நடந்தது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா இன்று அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவிழா தொடர்ந்து 10ம் தேதி வரை நடக்கிறது. 10ம் திருவிழாவான மார்ச் 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை 4.30 மணிக்கு கொடிப்பட்ட வீதிஉலா நடந்தது. 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4ம்படி செப்பு ஸ்தலத்தார் சின்னசுப்பிரமணிய அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியே வீதிஉலா வந்து கோயில் சேர்ந்தது.

இதில் கோயில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தன், மாரிமுத்து, மேலாளர் விஜயன், அலுவலர் சித்தையா, மணியம் ரமேஷ், சாவடி சங்கரன், செல்லப்பா மற்றும் 14 ஊர் செங்குந்த முதலியார் உறவின் முறை நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: