தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சைபர் குற்றங்களை தடுக்க போதுமான சட்டங்கள் இல்லை: ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கருத்து

சென்னை:  தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சைபர் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கான போதுமான சட்டங்கள் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்திருக்கிறார். சென்னை பல்கலைக்கழக குற்றவியல் சார்பில், அதிகரித்து வரும் பழிவாங்கும் படலம் என்பது தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கானது ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்களில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதாவது தற்போது இருக்கக்கூடிய நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சாதகமாக இருந்தாலும், அதில் பலவிதமான போதகங்களும் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அதாவது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியை கண்டாலும் கூட அதன் மூலமாக பல்வேறு நிலைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த சைபர் குற்றங்கள் அதிகரிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல சைபர் குற்றங்கள் அதிகரித்திருப்பதன் காரணமாக அது தொடர்பான சட்டங்கள் போதுமானதாக நம்மிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். சைபர் குற்றங்களை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சட்டங்கள் முன்னதாக இயன்றபட்டதன் அடிப்படையில் சைபர் குற்றங்களுக்கு  சட்ட ரீதியில் சரியான தண்டனை என்ன என்பது குறித்து ஒரு நெறிமுறைகள் இல்லை என்பதை விளக்கும் வழிகள் தான் தற்போது இத்தகைய கருத்தினை அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: