ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும்! : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

சென்னை : வெறுப்பு பேச்சுகளால் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். எனவே வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளுடன் கூடிய சட்டப்பிரிவுகள்  ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று தெரிவித்த அவர், நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் மக்கள் நல்லிணக்கமாக வாழ முடியுமா என்று சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் சமூக ஒற்றுமையைக் குலைக்கும் கருவிகளாக சமூக ஊடகங்கள் மாறிவிட்டன என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  

Advertising
Advertising

Related Stories: