×

3 நாள் குறைந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.56 உயர்வு; ஒரு கிராம் ரூ.4,4071-க்கும், சவரன் ரூ.32,568-க்கும் விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,4071-க்கும், சவரன் ரூ.32,568-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்க முதலே அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலைமை பிப்ரவரி மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய சாதனையை படைத்து வந்தது. கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் “ஜெட்” வேகத்தில் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.94 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4166க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.752 அதிகரித்து ஒரு சவரன் 33 ஆயிரத்து 328க்கு விற்றது. தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,112 அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஒரு சவரன் ரூ.25,600க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரே ஆண்டில் (24ம் தேதி வரை) மட்டும் சவரன் ரூ.7728 அளவுக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வந்தது. இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ரூ.128 குறைந்து ரூ.32,512-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது நகை வாங்குவோரை சுற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது.

Tags : Chennai ,Jewelery , Gold, Silver, Gold Price, Chennai, Jewelery,
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...