கடலூர் சிப்காட்டில் அதிக அளவு நீர் மாசு கண்டுபிடிப்பு: மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

கடலூர்: கடலூர் சிப்காட்டில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் மாசடைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய அளவில் 1982ம் ஆண்டில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இங்கு மருந்து பொருட்கள், பெயிண்ட் ரசாயனங்கள், பூச்சி மருந்துகள், என பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் நிலத்தடியிலும், உப்பனாற்றிலும் அப்படியே விடப்படுவதால் நிலத்தடி நீரில் ரசாயனம் கலந்து நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இதனால், இதனால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக, பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு கடலூர் சிப்காட்டில் மத்திய மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதுதொடர்பான ஆய்வறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் யாரும் எதிர்பார்க்காத அளவில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளன. அதாவது, கடலூர் சிப்காட் பகுதியில் தண்ணீரின் மாசளவு மிக அதிகளவு இருப்பதும், ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளில் விடப்படுவதும் தெரியவந்துள்ளது. தண்ணீரில் காப்பர் அளவு 99.89 மி.கிராமும், நிக்கல் அளவு 15.13 மி.கிராமும் உள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் முந்தைய உத்தரவுப்படி இப்பகுதி மக்களுக்கு சிப்காட் தொழிற்சாலைகளே தண்ணீரை வழங்க வேண்டும் என்றும், ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு இனி அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: