டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

டெல்லி : டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட வன்முறையில் ஏற்கனவே 38 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்வது வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: