அடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் மரணமடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!

சென்னை: அடுத்தடுத்து இரண்டு திமுக எம்எல்ஏக்கள் மரணம் அடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் பிப்ரவரி 29ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். கூட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பார். இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். ஆனால், திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

Advertising
Advertising

அவருக்கு கட்சியினர் திரளாக சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அடுத்த நாளே மற்றொரு எம்.எல்.ஏ காலமாகி இருப்பது அக்கட்சியினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழக சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98ஆக குறைந்துள்ளது. அடுத்தடுத்து திமுக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாளை திட்டமிட்டபடி அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது சரியாக இருக்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கருதியுள்ளார். எனவே, பின்னொரு நாளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

Related Stories: