×

இந்திய பங்குச்சந்தைகளில் 5-ம் நாளாக கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 1,075, நிஃப்டி 322 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,033 புள்ளிகள் சரிந்து 38,712 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 313 புள்ளிகள் சரிந்து 11,319 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்து வரும் நிலையில், இதன் எதிரொலியாக சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. டிரம்ப் இந்திய வருகையால் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படும் என்ற நம்பிக்கை நிலவியது. இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு வரலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது.

எனவே, முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்க தொடங்கினர். இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே சரிவுடன் தொடங்கியது. வங்கி பங்குகள் மற்றும் ஆட்டோமொபைல், ஸ்டீல், பொதுத்துறை வங்கி பங்குகள், ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் ஆகியவையும் சரிந்துள்ளன என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். வைரஸ் பாதிப்பு குறைந்தால் தான் இந்த நிலை மாறும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

Tags : Indian ,Sensex ,Nifty , Indian Stock Markets, Sensex, Nifty, Stock Markets Decline, Corona Virus
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...