சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் : பிரேமலதா விஜயகாந்த் உறுதி

திருச்சி : குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும் என்று கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். நிரூபர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் என்றார். மேலும் மாநிலங்களவை எம்பி பதவி குறித்து ஏற்கனவே பேசப்பட்டது போல் நல்ல முடிவு வரும் என்றும் ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கூட்டணி குறித்து பேசலாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: