×

சேலம் அருகே ரூ.5000 பணத்திற்காக மூதாட்டியின் கழுத்தை குத்திக் கொலை செய்ததாக 2 சிறுவர்கள் கைது

சேலம் : சேலம் அருகே ரூ.5000 பணத்திற்காக மூதாட்டியின் கழுத்தை குத்திக் கொலை செய்ததாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று மாலை தனியாக இருந்த பழனியம்மாள் என்ற மூதாட்டியின் கழுத்தை 17 வயது சிறுவன் குத்திக் கொலை  செய்தான். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ரூ.5,000 பணத்தை பறித்து சிறுவன் தப்பி ஓடினான்.மூதாட்டியைக் கொன்றதாக 17 வயது சிறுவனையும் அவனது கூட்டாளியான மற்றொரு சிறுவனையும் போலீஸ் கைது செய்தது.போதைப் பழக்கத்திற்கு அடிமையான இருவரையும் தனிப்படை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்துகிறது.  


Tags : boys ,Salem Salem , Salem, Children, Arrested, Grandmother, Murder, Separate
× RELATED நிருநின்றவூர் அருகே கால்வாயில்...