×

கடலாடியில் ஜெயலலிதா அறிவித்த 500 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை ரத்து செய்த மத்திய எரிசக்தி துறை

புதுடெல்லி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 500 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 1,500 ஏக்கரில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 3 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதற்கு விளக்கமளித்துள்ள மின்சார வாரியம் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. 1,500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளதால் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் மீண்டும் விண்ணப்பிக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஏற்கனவே அமையவிருந்த 4,000 மெகாவாட் அனல்மின்நிலைய திட்டமும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Jayalalithaa ,solar power plant ,Cancellation ,Central Energy Department , Cancellation of Solar Power, Solar Power Project, Central Energy Department, Solar Power Project
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...