பணம் வராததால் ஆத்திரம் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

தண்டையார்பேட்டை: பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்ற வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை பூக்கடை, ரத்தன் பஜார் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன் இரவில், இந்த ஏடிஎம் மெஷினை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்களை பார்த்ததும் அங்கிருந்த 2 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.  இதுகுறித்து பூக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது, 2 வாலிபர்கள் ஏடிஎம் கண்ணாடியை கைகளால் அடித்து உடைப்பது பதிவாகி இருந்தது.

Advertising
Advertising

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த சுதாகர் (27), சூரியா (26) ஆகியோர் கடந்த வாரம் வேலை விஷயமாக சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது, மேற்கண்ட ஏடிஎம் மெஷினில் கார்டை போட்டு பணம் எடுக்க முயன்றுள்ளனர். பணம் வராததால் ஆத்திரத்தில் ஏடிஎம் கண்ணாடியை உடைக்க முயன்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: