×

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர்

ஐபிஎல் தொடரில்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக  ஆஸி.வீரர் டேவிட் வார்னஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐதரபாத் அணியின் கேப்டனாக இருந்த நியூசி.வீரர் கேன் வில்லியம்சனிடம் இருந்து இந்த பொறுப்பை வார்னர்  ஏற்றுக் கொண்டுள்ளார்.இது குறித்து வார்னர் நேற்று, ‘சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2 சீசன்களாக அணியை வழி நடத்திய கேன் வில்லியம்சனுக்கு நன்றி தெரிவித்துக்  கொள்கிறேன். களத்தில் அவரின் ஆதரவையும், ஆலோசனைகளையும் எப்போதும் பயன்படுத்திக் கொள்வேன்். இந்த வாய்ப்பை வழங்கிய அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் ெகாள்கிறேன். மீண்டும் எங்கள் அணி கோப்பை வெல்ல  அணியுடன் இணைந்து சிறப்பாக செயல்படுவேன்’ என்று கூறியுள்ளார். டேவிடர் வார்னர் தலைமையிலான சன்சைர்ஸ் ஐதரபாத் அணி 2016ம் ஆண்டு கோப்பையை வென்றது.

கவுகாத்தியில் ஐபிஎல்
ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் ராஜஸ்தான் அணிக்கான உள்ளூர் போட்டிகள் ஜெய்பூரில் மட்டும் நடத்தப்பட்டன. அதில் 2 போட்டிகள் இந்த ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.5, 9  தேதிகளில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுடன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதும் போட்டிகள் கவுகாத்தியில் நடக்கும்.

ஆஸிக்கு 2வது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை லீக் போட்டியில் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. முதலில் களம் கண்ட ஆஸி ஒரு விக்கெட் இழப்புக்கு 189ரன் எடுத்தது. அதிரடியாக விளையாடி அந்த அணியின்  அலிஸ்சா ஹீலி 83(53பந்து, 10பவுண்டரி, 3சிக்சர்), பெத் மூனி 81*(58பந்து,9பவுண்டரி), ஆஷ்லி கார்ட்னர் 22*(9பந்து, 3பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். வங்கதேச அணியின் சல்மா மட்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கி  வங்கதேசம் 20ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 103ரன் மட்டும் எடுத்தது. அதனால் ஆஸ்திரேலியா 86ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பெற்றது. அந்த அணியின் மேகன், 3, ஜெஸ் 2, அன்னபெல், நிகோல் ஆகியோர் ஒரு விக்கெட்  எடுத்தனர். தொடர்ந்து 2வது முறை தோற்றுள்ள வங்கதேச அணியில் அதிகபட்சமாக  ஃபர்கனா 36ரன் எடுத்தார்.

Tags : Warner ,Sunrisers Hyderabad , Sunrisers Hyderabad team captain, Warner
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...