விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக்க சம்மதிக்கக்கோரி சந்திரபாபுவை முற்றுகையிட்டு ஒய்எஸ்ஆர் காங். ஆர்ப்பாட்டம்: 4 மணி நேரம் சிறைவைப்பால் பதற்றம்

திருமலை: விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக்க சம்மதிக்கக்கோரி சந்திரபாபுவை முற்றுகையிட்டு கருப்புக்கொடி ஏந்தி ஒய்எஸ்ஆர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு மாநிலம் முழுவதும் பிரஜா சைத்தன்ய யாத்திரை (மக்கள் விழிப்புணர்வு யாத்திரை)  மேற்கொண்டு வருகிறார். அதன்படி விஜயநகரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று  விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு காலை 11.40 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட சந்திரபாபுவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்து வெளியே செல்லவிடாமல் விமான நிலையத்தை முற்றுகையிட்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியினரும் அங்கு திரண்டதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது சந்திரபாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார் மீது செருப்பு, தக்காளி, கற்கள்,  தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வீசினர்.

மேலும் ஒரு காரின் மீது ஏறிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர் தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, சந்திரபாபு விசாகப்பட்டினத்தை நிர்வாக  தலைநகராக அறிவிக்கக் சம்மதம் தெரிவிக்காவிட்டால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை இழுத்துச்சென்றனர். இதனால் சந்திரபாபு மாலை  4 மணி வரை சுமார் 4 மணி நேரம் விமான நிலையத்தின் வெளியிலேயே  காத்திருந்தார்.  மேலும் அவர் விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். நிலைமை மோசமான நிலையில் போலீசார் வேண்டுகோளின் பேரில் சந்திரபாபு விமான நிலையத்தில் உள்ள விஐபி காத்திருப்பு அறைக்கு ெசன்றார்.சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘அரசியலில் 40 ஆண்டுக்கால அனுபவம் உள்ள எனக்கே உரிய பாதுகாப்பு வழங்க முடியாத இந்த அரசு சாதாரண குடிமக்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பு வழங்கும் என்பது தெரிகிறது’’ என்று ஆவேசமாக  கூறினார்.

Related Stories: