×

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது

சென்னை: பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தை செயல்படுத்துவதில் 2017-18ம் ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 2018-19ம் ஆண்டில் தமிழகம் 8வது இடத்தை பிடித்துள்ளது.தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன.  இந்த கிராம ஊராட்சிகளின் கீழ் 79 ஆயிரத்து 395 குக்கிராமங்கள் உள்ளது. இவற்றை எல்லாம் இணைக்கும் வகையில் மொத்தம் 1.49 லட்சம் கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள் உள்ளன. இதன்படி 97 ஆயிரத்து 200 கி.மீ நீள தார் சாலைகளும், 3  ஆயிரத்து 104 கி.மீ சிமென்ட் சாலைகளும், 2020 கி.மீ நீள ஈரடுக்கு கப்பி சாலைகளும், 8 ஆயிரத்து 939 நீளமுள்ள ஓரடுக்கு கப்பி சாலைகளும், 5 ஆயிரத்து 573 கி.மீ நீள சரளைக்கல் சாலைகளும், 33 ஆயிரத்து 077 கி.மீ நீள மண் சாலைகளும்  உள்ளது.

இந்த சாலைகள் தமிழ்நாடு சாலை ஊரக சாலைகள் திட்டம், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம், ஊரக உட்கட்டமைப்பு திட்டம், ஊரக சாலைகள் பராமரிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு  திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து கிராம சாலைகளை மேம்படுத்த மத்திய அரசும் நிதி வழங்கி வருகிறது. இதன்படி பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்படி கிராம சாலைகளை மேம்படுத்துவதற்கு  மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் 2015- 16ம் ஆண்டு 588.974 கி.மீ நீளமும், 2016-17ம் ஆண்டில் 883.189 கி.மீ நீளமும், 2017-18ம் ஆண்டில் 1,611.36 கி.மீ நீளமும், 2018-19ம் ஆண்டில் 2166.856 கி.மீ நீளமும்,  2019-20ம் ஆண்டில் 746.606 கி.மீ நீள சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2015-16ம் ஆண்டில் ரூ.205 கோடி, 2016-17ம் ஆண்டில் ரூ.309 கோடி, 2017-18ம் ஆண்டில் ரூ.591 கோடி, 2018-19ம் ஆண்டில் ரூ.589 கோடி, 2019-20ம் ஆண்டில் ரூ.268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சாலை  பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2016-17ம் ஆண்டில் 4வது இடத்தில் இருந்த தமிழகம் 2017-18ம் ஆண்டில் 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்தது.  இந்நிலையில் 2018-19ம் ஆண்டில் 6 இடங்கள் பின்தங்கி 8வது இடத்தை பிடித்துள்ளது.


Tags : places ,Village Roads Project Functional Tamil Nadu , Prime Minister's Village Roads Project Accelerated to 8th place: 6 lags behind 2017
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!