×

காதல் விவகாரத்தில் முக்கூடல் கல்லூரி மாணவி மர்மச்சாவு: அடுத்தடுத்த புகார்களால் பரபரப்பு

நெல்லை: காதல் விவகாரத்தில் முக்கூடலில் மர்மமான முறையில் இறந்த கல்லூரி மாணவி குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்தவர் செல்வகுமார் (55). அப்பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் அதே பகுதியை சேர்ந்த சீதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள்கள் செரீனாமதி (18), செலீனாமதி (16) ஆகியோர் உள்ளனர். இதனிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வகுமாருக்கும், சீதாவிற்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து அதே ஊரில் வாழ்ந்து வந்தார். இதனால் இரு பெண் குழந்தைகளும் தந்தையுடன் வசித்து வந்தனர். மேலும் கணவன், மனைவி இருவரும் விவகாரத்து கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சீதாவும் உடல் நலமில்லாமல் இறந்தார். செரீனாமதி, அம்பை அருகே மதபோதனை கற்பித்து வரும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தங்கை செலீனாமதி அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் செரீனாமதி கல்லூரிக்கு சென்று வரும் வழியில் முக்கூடலை சேர்ந்த உறவுக்கார வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் காதலித்து வந்தனர். மேலும் இருவரும் செல்பி எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த போட்டோவை தனது நண்பர்களுக்கு ஸ்மார்ட் செல்போனில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அந்த போட்டோவை மாணவி செரீனாமதியின் தந்தை மற்றும் உறவினர்களின் செல்போனுக்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.
செல்போனில் போட்டோக்களை பார்த்தவுடன் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் வழக்கமாக தந்தை கண்டிப்பது போன்று செரீனாமதியை கண்டித்து அடித்துள்ளார். இதனிடையே முக்கூடல் போலீசில்  செல்வகுமார் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகளுடன் பழகிய வாலிபர்  மற்றும் அவரது நண்பர்களின் செல்போனில் போட்டோக்களை நீக்க வேண்டும் என அந்த  மனுவில் கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபர்  மற்றும் அவரது நண்பர்களை வரவழைத்து செல்போன்களிலுள்ள போட்டோக்களை  அழித்தும், கண்டித்தும் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தனர். இவர்கள்  மீது மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என செரீனாமதியின் தந்தை கூறியதால்,  சம்பந்தப்பட்ட வாலிபர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே செரனீாமதியை அவரது தந்தை கல்லூரிக்கு மட்டுல்லாமல் வீட்டை விட்டு எங்கும் ெசல்லக்கூடாது என்று கூறினாராம். இதனால் அவர் வீட்டிலுள்ள ஒரு அறையில் முடங்கிக் கிடந்தார். மன வேதனையில் இருந்த அவர் கடந்த 21ம்தேதி குடும்பத்தினருக்கு தெரியாமல், எலியை கொல்லக்கூடிய ‘எலி கேக்கை’ தண்ணீரில் ்கலந்து குடித்து விட்டு படுத்து விட்டார். வாந்தி எடுத்து மயங்கிய அவரை குடும்பத்தினர் முக்கூடலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 24ம்தேதி மாணவி செரீனாமதி இறந்தார். மாணவியின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து முக்கூடல் போலீசில் மாணவியின் தந்தை செல்வகுமார் அளித்த புகாரில் செரீனாமதியின் காதலன் செல்போனில் போட்டோக்கள் எடுத்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் செரீனாமதியின் தாய் சீதாவின் அக்கா அளித்த புகாரில், மாணவியை அவரது தந்தை செல்வகுமார் தாக்கியதால் தான் செரீனாமதி தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்தார். போலீசார், செரீனாமதியின் தங்கையிடம் புகார் மனுவை பெற்று சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே வழக்கின் பிரிவுகள் மாற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Marmachau ,Tricot College ,Love affair , Love affair, tripod college student, Marmachau
× RELATED தனியார் விடுதியில் டாக்டர் மர்மச்சாவு திண்டுக்கல்லில் பரபரப்பு