×

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: கலவரம் குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்தது டெல்லி காவல்துறை

டெல்லி: டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை டெல்லி காவல்துறை அமைத்தது.

டெல்லி கலவரம்:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததை அடுத்து தொடர்ந்து  நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. சில வாகனங்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவப்படையினர், அதிரடிப் படையினர்  கலவரம் பாதித்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

தற்போது வரை கலவரத்தில், டெல்லி தலைமை காவலர் ரத்தன் லால் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுள் ஒரு பெண் உட்பட 9 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர்,  படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயமடைந்த பெரும்பாலானோர் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் பொழுது கீழே விழுந்து காயமடைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு டெல்லியில் தற்போது 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலம்பூர், பார்பர்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக்  காணப்பட்டன. கலவரம் தொடர்பாக நேற்று 11 FIR பதிவு செய்த நிலையில் இன்று 48 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு புலனாய்வுக் குழு:

இந்நிலையில், டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை டெல்லி காவல்துறை அமைத்தது. குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் பி.கே. சிங் மேற்பார்வையில், குற்றப்பிரிவின் கீழ் ஜோய் டிர்கி, ராஜேஷ் தியோ ஆகிய இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணையை உடனடியாக இந்த குழு தொடங்கும். . கலவரம் குறித்த  அனைத்து எஃப்.ஐ.ஆர்களும் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்த குழுக்களை விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Delhi ,investigations teams ,Delhi Police ,teams , Delhi tops up to 38 killed in violence: Delhi Police sets up 2 special teams to investigate riots
× RELATED பிரதமர் இல்ல முற்றுகை...