×

பீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை திரும்ப பெறுகிறோம்: மராட்டிய அமைச்சர் அனில் தேஷ்முக்

மகாராஷ்ட்டிரா: பீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை மராட்டிய அரசு திரும்ப பெற்றது. மராட்டா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டம் தொடர்பான 460 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புனே மாவட்டத்திலுள்ள பீமா கோரேகானில் 1818-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி படையினருக்கும், மராத்திய பேஷ்வா படையினருக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இதில், பேஷ்வா படையினா் தோல்வியைத் தழுவினா். எனினும், கிழக்கிந்திய கம்பெனி சாா்பில் போரில் பங்கேற்ற சுமாா் 500 தலித் வீரா்களில் 49 போ் உயிரிழந்தனா்.

இந்தப் போரில் உயிரிழந்த தலித்துகளை நினைவுகூரும் வகையில், பீமா கோரேகானில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வைப் பெருமையின் அடையாளமாகக் கருதி, பீமா கோரேகானில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி தலித் மக்கள் ஒன்றுகூடி நினைவு தினத்தை அனுசரிப்பது வழக்கமாக உள்ளது. போா் நடைபெற்று 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு பிரிவினரிடையே வன்முறை மூண்டது. இதில் ஒருவா் கொல்லப்பட்டாா்; பலா் காயமடைந்தனா்.

இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் இடையே கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பீமா கோரேகான் கலவரம் தொடர்பான வழக்கின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி, உத்தவ்தாக்கரே தலைமையிலான மாநில அரசு கோரியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாவது; பீமா கோரேகான் வழக்கு தொடர்பான பதிவு செய்யப்பட்ட 649 வழக்குகளில் 348 மற்றும் மராட்டிய கிளர்ச்சி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 548 வழக்குகளில் 460 வழக்குகளை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Tags : Anil Deshmukh ,riots ,Goregaon ,Bihar , Anil Deshmukh, Minister of Bihar, Goregaon Riot, Maratham
× RELATED ஆபத்தை அறிந்து பணியில் ஈடுபடும்...