டெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் சந்திப்பு : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லி : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் இந்தியா - மியான்மர் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மியான்மர் அதிபர் வின் மைன்ட்,  பிப்ரவரி 29ம் தேதி வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் அழைப்பை ஏற்று வின் மைன்ட்இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் வின் மைன்ட், புதுடெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தரப்பு உறவுகள் குறித்து இவர்கள் விரிவாக விவாதித்தனர். இதைத் தொடர்ந்து 2 நாடுகளுக்கும் இடையே சுகாதாரம், தகவல் தொடர்பு, பெட்ரோலியம், எரிசக்தி, வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு ,உள்கட்டமைப்பு உள்ளிட்ட 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Advertising
Advertising

முன்னதாக குடியரசு தலைவர் மாளிகையில் மியான்மர் அதிபர் வின் மைன்டுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் வின் மைன்ட் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருடனும் மியான்மர் அதிபர் வின் மைன்ட் சந்தித்து பேசினார். இன்று மாலை அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேச இருக்கிறார். புத்த மதத்தினரின் புனித நகரமான புத்த கயாவிற்கும் மியான்மர் அதிபர் செல்ல இருக்கிறார். முன்னதாக பிரதமராக நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைன்ட் 2019 ல் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: