ஸ்கை ட்ரீ

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

ஜப்பானின் மிக உயரமான டவர் ஸ்கை ட்ரீ. புர்ஜ் கலீபாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய டவரும் இதுதான். தொலைக்காட்சி மற்றும்  வானொலி ஒலி, ஒளிபரப்பு இங்கு முக்கியமாக  நடக்கிறது. 9 டி.வி. சேனல்களும், 5 வானொலி நிலையங்களும் இருக்கின்றன. 634 மீட்டர் உயரம்  கொண்ட இந்த டவர் டோக்கியோ நகரில் உள்ள சுமைடாவில் அமைந்துள்ளது.பூமி அதிர்வைத் தாங்கும் இந்த டவரில் ஒரு இடம் உள்ளது. 450 மீட்டர் உயரம் உள்ள அந்த இடத்தின் சுவர்கள் கண்ணாடியால் மூடப் பட்டிருக்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர் அங்கே நிற்க முடியும்.அங்கிருந்து டோக்கியோ நகரின் அழகைத் தரிசிப்பது தனி அனுபவம். இந்த டவருக்குள் நுழைய கட்டணம் செலுத்த வேண்டும். 2012-இல் ஸ்கை ட்ரீ திறக்கப்பட்டது. முதல் வாரத்திலேயே 16 லட்சம் பேர் ஸ்கைட்ரீயைப் பார்க்க குவிந்துவிட்டனர்.

Related Stories: