தென்கொரியாவுக்கு முதல் ஆஸ்கர் விருது

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

கடந்த வாரம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா வெகு பிரமாண்டமாக  அரங்கேறியது. திரைப்பட ரசிகர்கள் எல்லோரும் தங்களின் அபிமான  படங்களுக்கும் நடிகர் களுக்கும் விருது கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருக்கொண்டிருந்தனர். ‘ஜோக்கர்’, ‘1917’ ஆகிய படங்கள் தான் ஆஸ்கரை அள்ளப் போகின்றன என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால்,  யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் கொரியாவின் ‘பாரஸைட்’ என்ற படம் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த அயல்நாட்டு மொழிப்படம் என நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளி வரலாறு படைத்துள்ளது. ஆஸ்கர் வென்ற முதல் தென்கொரியா படம் இதுதான். தவிர, ஆங்கிலம் அல்லாத வேறு மொழியில் வெளியாகி சிறந்த  படத்துக்கான ஆஸ்கர்  வென்ற முதல் படம், சிறந்த படம் மற்றும் சிறந்த அயல்நாட்டு மொழிப் படம் என இரண்டு விருதுகளையும் பெற்ற முதல் படம் என பல  பெருமைகளையும் படைத்திருக்கிறது ‘பாரஸைட்’.

இதுபோக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் உயரிய விருதைப் பெற்ற முதல் தென் கொரியா படம் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்திருக்கிறது.  இப்படத்தின் இயக்குனர் போங் ஜூன் ஹோ. ஏழை- பணக்காரன் என்ற வர்க்கபேதத்தை ஆழமாக, எளிமையாக சொல்வதோடு மனிதர்களின் அக உலகையும் அற்புதமாக சித்தரித்திருக்கிறது இந்தப் படம். கொரிய மொழியாக இருந்தாலும் கூட எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் திரைப்பட மாக்கப்பட்டிருப்பது சிறப்பு. இதுபோக ஹில்துர் என்ற ஐஸ்லாந்து பெண்மணி ‘ஜோக்கர்’ படத்துக்கு இசையமைத்த தற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கரை வென்றுள்ளார். ‘கோல்டன் குளோப்’, ‘பப்டா’ என இரண்டு விருது களைப் பெற்ற முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையையும் தன்வசமாக்கியுள்ளார் ஹல்துர்.

Related Stories: