×

T-20 உலக கோப்பை தொடரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்த் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியப் பெண்கள் அணி

மெல்போர்ன்: T-20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியப் பெண்கள் அணி முன்னேறியது. நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான T-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. ரோஸ்மேரி பந்துவீச்சில் தனியா  23 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10 ரன்களில் அவுட்டாகினர். கேப்டன் ஹர்மன்பிரீத் 1 ரன், வேதா 6 ரன்கள் எடுத்து ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். ஷபாலி வர்மா 46 ரன்களில் நம்பிக்கை அளித்தார். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது  ஷிகா பாண்டே (10) அவுட்டாகாமல் இருந்தார்.

நியூசிலாந்து அணிக்கு ராகெல் 12 ரன்கள், கேப்டன் சோபி டிவைன் 14 ரன்கள் எடுத்தனர். சுஜீ பேட்ஸ் 6 ரன்கள் மட்டும் எடுத்தார். ராதா யாதவ் சுழலில் கேட்டி 25 எடுத்து அவுட்டானார். அமெலியா கெர் பவுண்டரியாக விளாசி நெருக்கடி தந்தார். ஷிகா பாண்டே வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஜென்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா, வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், ஏ பிரிவில் மூன்று போட்டியிலும் வென்றுள்ள இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.


Tags : New Zealand ,World Cup ,India ,T-20 , India , New Zealand ,4 runs,T-20 World Cup
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...