கோலாலம்பூர்: மலேசிய பிரதமராக கடந்த 1981ம் ஆண்டில் இருந்து பதவியில் இருந்த மகாதீர் முகமது (94), 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், 2018ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று `நம்பிக்கை ஒப்பந்தம்’ என்ற பெயரில் அன்வர் இப்ராகிம் தலைமையிலான எதிர்க்கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிரதமரானார். இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகாதீர், தனது பதவியை நவம்பருக்கு பின்னர் அன்வருக்கு விட்டு கொடுப்பதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக கடந்த வாரம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கடந்த திங்களன்று அவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது, அன்வர் இப்ராகிம் பதவிக்கு வருவதை தடுக்கவும், புதிய கூட்டணியை அமைப்பதற்காகவும் மகாதீர் செய்த வியூகமாக கருதப்பட்டது.