×

மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யாததால் தலைமறைவு குற்றவாளியாக நவாஸ் ஷெரீப் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தலைமறைவு குற்றவாளியாக இம்ரான்கான் அரசு அறிவித்தது.  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்(70). ஊழல் வழக்கில் இவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.  சிறையில் இருந்த அவருக்கு இதயநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் சிகிச்சை பெறுவதற்காக லண்டன் செல்ல அனுமதி கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் நவாஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று நீதிமன்றம் அவருக்கு 4 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாத இறுதியில் லண்டன் சென்ற அவர் இதுவரை பாகிஸ்தான் திரும்பவில்லை.

இந்நிலையில், பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்த பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில், ‘‘ஜாமீன் விதிமுறைகளை மீறியதால் நவாசை பாகிஸ்தான் அரசு தலைமறைவானவராக அறிவித்துள்ளது. எனவே இன்று முதல் அவர் சட்டப்படி நாட்டுக்கு திரும்ப முடியாத தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார்’’ என்றார்.



Tags : Nawaz Sharif , Nawaz Sharif, medical report, convict convicted
× RELATED அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளம் பயன்படுத்த தடை