எல்லையை கடக்க இந்திய ராணுவம் தயங்காது

புதுடெல்லி: நாட்டை பாதுகாப்பதற்காக இப்போது எல்லையை தாண்டுவதற்கு இந்திய வீரர்கள் தயங்க மாட்டார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.  இதனை தொடர்ந்து பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்தது.

இதனையொட்டி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், “ தீவிரவாதத்துக்கு எதிரான அணுகுமுறை மற்றும் தீவிரவாதத்துக்கு பதிலடி தருவதில் மாற்றத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

2016ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 2019ம் ஆண்டு பாலகோட் விமான படை தாக்குதல் ஆகியவை இந்த மாற்றங்களுக்கு சாட்சியாகும். நாட்டை பாதுகாப்பதற்காக தற்போது எல்லையை தாண்டுவதற்கு இந்திய வீரர்கள் தயங்க மாட்டார்கள்” என பதிவிட்டு இருந்தார்.

Related Stories: