×

மாதவரத்தில் இயங்கி வரும் மெட்டல் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

திருவொற்றியூர்: சென்னையை தலைமையிடமாக கொண்டு ஜெயின் மெட்டல்ஸ் ரோலிங் மில்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு காப்பர் கம்பிகளை தயாரித்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு மாதவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல கோடி காப்பர் கம்பி வர்த்தக பரிவர்த்தனையில் இந்நிறுவனம் பல்வேறு வரி ஏய்ப்பு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக சென்னை வருமான வரி துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, சென்னை மாதவரம், தபால்பெட்டி சாலை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளைகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் மேற்கண்ட 2 கிளைகளில் வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முடிந்த பிறகு இந்நிறுவனம் எவ்வளவு வரி ஏய்ப்பு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது என்ற விவரம் தெரிய வரும் என ஐ.டி அதிகாரிகள் கூறினர்.



Tags : terminus ,company ,IT Raid: Metalworking Madhavaram ,IT Raid , Monthly, Metal Company, IT Raid, Important Documents
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...