வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்: ரஜினி பரபரப்பு பேட்டி

சென்னை: டெல்லியில் வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினி கூறினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக நிற்பேன் என்றே கூறினேன். மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். டிரம்ப் போன்ற தலைவர் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு  கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். டெல்லியில் வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும்.  அப்படி இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை நான் கண்டிக்கிறேன்.

டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம்.  டெல்லி போராட்டங்கள் மிகவும் அதிகம் போய்க்கொண்டிருக்கிறது. வன்முறைக்கு இடம் தரக்கூடாது. போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது  அமைதியாக நடைபெறலாம்.

சிஏஏ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப்பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை  திரும்பபெறாது என நினைக்கிறேன்.நான் பாஜவின் ஊதுகுழல், பாஜக என் பின்னால் உள்ளது என கூறுகிறார்கள். எது உண்மையோ அதை தான் சொல்கிறேன். என் பின்னால் பாஜ இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது.

 இவ்வாறு ரஜினி கூறினார்.

சபாஷ் நண்பரே...: ரஜினி பேச்சுக்கு கமல் பாராட்டு

டெல்லி கலவரம் குறித்த ரஜினியின் பேச்சுக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘சபாஷ் நண்பர் ரஜினிகாந்த். அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல. ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை. வருக.வாழ்த்துகள்’ என டிவிட்டரில்  தெரிவித்துள்ளார்.

Related Stories: