2018-19ம் கல்வியாண்டில் மோசடியாக மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் யார்?

* பட்டியல் எடுக்கும் பணி தீவிரம்

* பெங்களூரு பயிற்சி மையத்திற்கு 20 லட்சம் கொடுத்தது அம்பலம்

சென்னை: 2018-19ம் கல்வியாண்டில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்று தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலை  தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.2019ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் பலர் தேர்வாகி மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் தேனி மருத்துவக்கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றி  பெற்ற சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் க.விலக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி போலீசார்  உதித்சூர்யா மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தையையும் கைது செய்தனர்.  இருவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி  உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் மோசடி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி மருத்துவ கல்லூரிகளில் 2 மாணவிகள் உட்பட  10 படித்து வந்தது உறுதியானது. அதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக 2 மாணவிகள் உட்பட 10 பேரை அதிரடியாக கைது செய்தனர். ஆனால் இவர்கள் போல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய 2 பெண்கள் உட்பட  10 பேரை சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யமுடியவில்லை. இதனால் சிபிசிஐடி மோசடியாக நீட் தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

இதற்கடையே 2018-19ம் ஆண்டில் நீர் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி மோசடியாக பலர் மருத்துவம் படித்து வருவது தெரியவந்தது. அதைதொடர்ந்து சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி கொடுத்த புகாரின் படி  ெசன்னை மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த தனுஷ்குமார் (20) என்ற மாணவன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை தேவேந்திரன்(53) ஆகிய இருவரை நேற்று  முன்தினம் அதிரடியாக கைது ெசய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் உள்ள நீர் தேர்வு மைய நிர்வாகிகளுக்கு ₹20 லட்சம் பணம் கொடுத்து பீகார் மாநிலம் கயா என்ற தேர்வு மையத்தில் ஆள்மாறாட்டம் மூலம் இந்தி  மொழியில் தேர்வு எழுதிய ெசன்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இதுபோல் பலர் ₹15 முதல் ₹20 லட்சம் வரை பணம் கொடுத்து நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் படித்து வருவதாகவும், இதற்கு  பின்னணியில் பல முக்கிய பிரமுகர்கள் உள்ளதாகவும் சிபிசிஐடி போலீசாரிடம் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 2018-19ம் ஆண்டு நீட் தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி மாணவர்கள் வெற்றிகரமாக தற்போது மருத்துவம் படித்து வருகின்றனர். அதே பாணியில் தான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் இந்த மோசடி  செயல்படுத்தப்பட்டது. ஆனால் தேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த உதித்சூர்யா சிக்கியதால் அனைவரும் சிக்கி கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் கடந்த 2018ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று தற்போது மருத்துவ கல்லூரிகளில் படித்து வரும் 2,500 பேரின் புகைப்படங்களை பெற்று நீட் தேர்வின் போது கொடுத்த புகைப்படங்களுடன் ஒப்பிடும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு இடமான உள்ள மாணவர்களின் பட்டியலை சிபிசிஐடி போலீசார் மருத்துவ கல்வி இயக்ககம் அதிகாரிகள் உதவியுடன் எடுத்து வருகின்றனர்.இந்தி மொழியில் தேர்வு எழுதிய ெசன்னை மருத்துவ கல்லூரியில்சேர்ந்தது தெரியவந்தது.

Related Stories: