பாக்.ஜலசந்தி கடலில் நீந்தி அமெரிக்க பெண் சாதனை

ராமேஸ்வரம்: தலைமன்னார் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை எடிஹூ இலங்கை கடற்படையினர் முன்னிலையில் கடலில் குதித்து நீந்தத் துவங்கினர். இவருக்கு உதவியாக பிரிட்டனை  சேர்ந்த நீச்சல் வீரர் ஆடம்மோஸ் உடன் நீந்தி வந்தார்.  25 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா படகு ஒன்றில் பாதுகாப்பாக வந்தனர்.இந்திய கடல் எல்லையை தாண்டிய இக்குழுவினர் நேற்று மாலை 3.45 மணியளவில் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து 2 கடல் மைல் தூரத்தில் கடலுக்குள்ளேயே இவர்களை நிறுத்திய  இந்திய கடலோர காவல்படையினர் எடிஹூவின் நீச்சல் சாதனையை பதிவு செய்து கொண்டதுடன் இந்தியா வருவதற்கு முறையான அனுமதி இல்லாததால் உடனடியாக இலங்கைக்கு படகில் திருப்பி அனுப்பினர்.

Related Stories: