×

ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரமாக உயர்வு: தமிழக அரசு உத்தரவு

வேலூர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியுதவி ₹35 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குடும்ப பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ₹35 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் பிற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குடும்ப பாதுகாப்புத்திட்ட நிதியுதவி ₹35 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரமாக உயர்த்தி 2013ல் உத்தரவிடப்பட்டது. இதற்கான சந்தா தொகையும் ₹70ல் இருந்து ₹80 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு இணையாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான சந்தா தொகையும் ₹80 பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்களுக்கும் குடும்ப பாதுகாப்புத்திட்ட நிதியுதவியை ₹35 ஆயிரத்தில் இருந்து  ₹50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று அரசின் பிற துறை ஓய்வூதியர்களை போன்றே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் குடும்ப பாதுகாப்புத்திட்ட நிதியுதவி ₹35 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரமாக உயர்த்தி  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2014 நவம்பர் முதலே செயல்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஏற்கனவே அரசு அனுமதித்துள்ள மூலதன நிதியில் இருந்து மேற்கொள்ளலாம் என்றும், மேலும் தேவை  ஏற்பட்டால் மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து மேற்கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Rural Development ,Government Govt ,Panchayat Sector ,Tamil Nadu , Rural Development, Panchayat Sector,Security,Tamil Nadu government orders
× RELATED மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மகளிர் தின விழா