விபத்தில் சிக்கிய காரை விடுவிக்க 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது: கையும் களவுமாக பிடிபட்டார்

கரூர்:சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் அபிஷேக்மாறன். கடந்த 16ம் தேதி அன்று இவர் தனது காரில் மதுரை சென்று விட்டு சேலம் புறப்பட்டு சென்றார். காரை ராஜசேகர் என்பவர் ஓட்டினார். கார் வேலாயுதம்பாளையம்  அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்து சம்பந்தமாக வேலாயுதம்பாளையம் போலீசார் இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அபிஷேக் மாறனின் காரை விடுவிப்பதற்கும், காப்பீடு சான்றிதழ் பெறுவதற்கும்  ரூ.15ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வேலாயுதம்பாளையம் தலைமை காவலர் செந்தில்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் பணம் தர விருப்பமில்லாத அபிஷேக்மாறன், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயன தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று காலை வேலாயுதம்பாளையம் காவல்  நிலையத்திற்கு சென்ற அபிஷேக்மாறன், அங்கு இருந்த தலைமை காவலர் செந்தில்குமாரிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories: