×

வன்முறை தீர்வல்ல டெல்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிப்போருக்கும், எதிர்ப்போருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலும், அதனால் உருவான கலவரமும் நான்காவது நாளாக நீடிப்பது அதிர்ச்சியும், கவலையும்  அளிக்கிறது. இந்த வன்முறையில் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நிறுத்தப்பட வேண்டும்.டெல்லியில் இயல்பு நிலைமை திரும்பச் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி மாநில துணை நிலை ஆளுனர், முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளார். டெல்லி மாநில காவல்துறையும் சிறப்பு ஆணையராக  வஸ்தவா நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுள்ளார்.

டெல்லி கலவரத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வன்முறை மூலம் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என்பதை இரு தரப்பினரும் உணர்ந்தால் அனைத்து சிக்கல்களையும் தீர்த்து விட முடியும். இதை உணராமல் வன்முறை மற்றும் கலவரத்தை கட்டவிழ்த்து விடுபவர்கள் யாராக  இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, டெல்லியில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலை நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகமும், டெல்லி அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Tags : Delhi ,Ramadas , Violence , solution, peaceful retreat , Delhi
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...