பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% சேர்க்கை வழங்கப்படுகிறதா?: அரசு கண்காணிக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் கோட்டாவில் சேர்க்கப்படுகிறார்களா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் மற்றும் நிர்வாகிகள் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளி கல்வி துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில்  கூறி இருப்பதாவது:தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை மூலம் 2012, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் 1,512 தொகுப்பூதிய பணியாளர்களாக கணக்கர், மேலாளர், கல்வி மேலாண்மை முகமை, கணினி விவர பதிவேட்பாளர் போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்டார்கள்.  இவர்களுக்கு தொகுப்பூதியமாக ₹8,400 வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள இந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை திட்ட ஒப்புதல் வாரியம் மூலம் தற்போது ₹20 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை தொகுப்பூதியம் வழங்கப்படும். ஆனால் தமிழகத்தில்  பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை ஒதுக்கிய தொகை பெறப்பட்டும் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. சில மாநிலங்களில் இந்த பணியாளர்கள் பணிநிரந்தரமும் செய்துள்ளார்கள்.எனவே, தமிழகத்தில்  பணிபுரியும் இந்த பணியாளர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை ஒதுக்கிய ஊதியத்தை நிலுவைத்தொகையோடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய  மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் சேர்க்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். 2011ம் ஆண்டில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து  விலக்களித்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: