×

தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு நியமனம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு நியமனம் செய்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்களாக ஜே.எம்.ஆரூண், நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, முருகானந்தம்,  பொன்.கிருஷ்ணமூர்த்தி, செல்வம், ராமசுப்பு, தணிகாசலம், வழக்கறிஞர் சூரியபிரகாசம், வழக்கறிஞர் நவாஸ், எம்.பி. ரஞ்சன்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்குழுவின் முதல் கூட்டம் மார்ச் 6ம் தேதி காலை 11 மணிக்கு  சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Tags : Tamil Nadu ,Congress Property Protection and Recovery Committee Appointed: KS Alagiri Announces Tamil Nadu , Tamil Nadu ,Congress, Appointment , Rescue Committee, KS Alagiri
× RELATED தமிழகத்திலேயே சென்னை தான் கொரோனா...