முறைகேடுகளை தடுக்க ‘பேஸ் லாக்’: ஆன்லைனில் ஆதார் கார்டு டவுன்லோடு செய்ய புதிய முறை...அதிகாரிகள் தகவல்

சென்னை: முறைகேடுகளை தடுக்க ஆதார் கார்டினை ஆன்லைனில் டவுன்லோடு செய்ய இனி பேஸ் ரெகக்னைஸ் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு அனைத்து இந்திய குடிமக்களுக்கும்  மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையில் அனைத்து வயதினருக்கும் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களில்  ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகிறது.

ரேஷன் கார்டு தொடங்கி, வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, அரசின் மானியங்கள் உட்பட அனைத்து வகையான அரசு சார்ந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் கார்டினை பெறுவதற்கு கண்  கருவிழி, கைரேகை, கைவிரல் ரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகிறது. தனிமனிதனின் அனைத்து வகையான ஆவணங்களுடன் ஆதார் இணைக்கப்படுகிறது. இதனால் ஆதார் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியதாக உள்ளது. இருப்பினும்  பலரது ஆதார் விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியானது.

முன்பு ஆதார் கார்டு எண், செல்போன் எண் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆதார் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டு மேலும் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது. இனிவரும்  காலங்களில் ஆன்லைனில் ஆதார் டவுன்லோடு செய்ய வேண்டுமானால் சம்மந்தப்பட்ட நபரின் பேஸ் ரெகக்னைஸ் (பேஸ் லாக்) பதிவு செய்ய வேண்டும். பின்னர்தான் டவுன்லோடு செய்ய முடியும். அதேபோல் ஆதார் குறித்த தகவல்கள்  திருடப்படாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆதார் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எழுத்து பிழையை போக்க

ஆதார் கார்டில் மிக முக்கிய பிழையாக தந்தை பெயர் என்பதற்கு பதிலாக கணவர் பெயர் என்றும், கணவர் பெயருக்கு பதிலாக தந்தை பெயர் என்றும், பாதுகாவலர் என்பதற்கு பதிலாக தந்தை பெயர் என்றும் மாற்றி அச்சிடப்படுகிறது. இதனால்  இனி வழங்கப்படும் ஆதார் அனைத்திற்கும், காடியன் ஆப் என்று மட்டுமே ஆதார் சாப்ட்வேரில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: