மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிந்தது: கிலோ ரூ.40க்கு விற்பனை

மதுரை: மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால், முருங்கைக்காய் விலை குறைந்துள்ளது. இன்று கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மேட்டுபாளையம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. சென்ட்ரல் மார்க்கெட்டில் இன்றைய காலை நிலவரப்படி காய்கறிகளின் வரத்து பொதுவாக அதிகமாக இருந்தது. இதனால் விலையும் குறைவாக இருந்தது. காய்கறிகளின் இன்றைய விலை விபரம்: (ஒரு கிலோவிற்கு விலை) கத்திரிக்காய் ரூ.20, தக்காளி ரூ.10, பச்சை மிளகாய் ரூ.20, பல்லாரி ரூ.30, சின்னவெங்காயம் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.20, கருணைக்கிழங்கு ரூ.30, சேம்பு ரூ.30, பீன்ஸ் ரூ.40, கேரட் ரூ.50, காலி பிளவர் ஒரு பூ ரூ.15, நூக்கல் ரூ.10, டர்னிப் ரூ.10, பட்டர் ரூ.80, சோயாபீன்ஸ் ரூ.70, பச்சை பட்டாணி ரூ.30, அவரை ரூ.25, பீட்ரூட் ரூ.15, முள்ளங்கி ரூ.10, வெண்டைக்காய் ரூ.15, சீனி அவரை ரூ.15, பூசணிக்காய் ரூ.10, முருங்கைக்காய் (கிலோ) ரூ.40, முட்டைகோஸ் ரூ.10.

பச்சை மொச்சை ரூ.30, சவ்சவ் ரூ.10, கருவேப்பிலை ரூ.40, மல்லி ரூ.15, புதினா ரூ.15, பழைய இஞ்சி ரூ.60, புதிய இஞ்சி ரூ.20, கோவக்காய் ரூ.20, வாழை இலை (ஒரு அடுக்கு) ரூ.15, வாழைக்காய் ஒன்று ரூ.3. இதில் வரத்து அதிகாரித்ததால், கடந்த வாரத்தை விட முருங்கைககாய் விலை குறைந்துள்ளது. இன்று கிலோ ரூ.40க்கு விற்பனையானது. ஆனால், காரட் வரத்து குறைந்ததால், விலை சிறிது உயர்ந்து கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.எஸ்.முருகன் கூறுகையில், ‘‘தற்போது, காய்கறிகளின் விளைச்சல் நன்றாக உள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. பொதுவாக அனைத்து காய்கறிகளின் விலையும் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது’’ என்றார்.

Related Stories: