பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 8-வது முறையாக தேர்வு; நிர்வாகிகள் வாழத்து

பாட்னா: ஒடிசாவின் கட்டக் நகரில் முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக் மற்றும் கியான் பட்நாயக்கிற்கு மகனாகப் பிறந்த நவீன் பட்நாயக், தமது இளமையின்  பெரும்பான்மைக் காலத்தில் ஒடிசா மற்றும் அரசியல் இரண்டிலிருந்தும் விலகியிருந்து எழுத்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது தந்தை பிஜு பட்நாயக்கின்  மறைவிற்குப் பின்னரே அரசியலில் ஈடுபட்டார். 1996-ம் ஆண்டு அஸ்கா தொகுதியிலிருந்து ஜனதா தளம் சார்பில் பதினொன்றாவது மக்களவைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டிற்குப் பிறகு 1997-ம் ஆண்டு ஜனதா தளத்திலிருந்து பிரிந்தார்.

1997-ம் ஆண்டு டிசம்பா் 26-ம் தேதி பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தோற்றுவித்து, அப்போது முதல் அவரே அக்கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.  பாரதிய ஜனதா கட்சி தலைமையேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நடுவண் அமைச்சில் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பாரதிய  ஜனதா கட்சியுடன் கூட்டணியில் ஒரிசா மாநில தேர்தல்களில் வெற்றி கண்டதால் 2000-ம் ஆண்டு தமது நடுவண் அமைச்சுப் பதவியிலிருந்து விலகி புதிய  கூட்டணி ஆட்சியின் முதல்வராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, 5-வது முறையாக ஒடிசா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையே, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கு தோ்தல் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவா்  பதவிக்கு வரும் இன்று நடைபெற்ற தோ்தலில் போட்டியிடுவதற்காக தோ்தல் நடத்தும் அதிகாரி பி.கே.தேவிடம் நவீன் பட்நாயக் ஞாயிற்றுக்கிழமை  வேட்புமனுவை சமா்ப்பித்தார். இந்நிலையில், எட்டாவது முறையாக பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து,  கட்சி நிர்வாகிகள் நவீன் பட்நாயக்-விற்கு வாழ்த்து தெரிவித்து வண்ணம் உள்ளனர்.

Related Stories: