சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லாததால் தடுப்பணை வறண்டது: விவசாயிகள் கவலை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் தற்போது மழை இல்லாததால், சில கிராமங்களில் உள்ள தடுப்பணைகள் வறண்டது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய தேவைக்கும் தடுப்பணை மற்றும் குளம், குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மழைகாலங்களில் நீர்நிலைகளில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து தடுப்பணை மூலம் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.  

இதில், ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், ஆழியார், சமத்தூர், கோமங்கலம், பொன்னாபுரம், வடக்கிபாளையம், ராமபட்டிணம், நெகமம் உள்பட பல கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. இங்கு மழை காலங்களில் தண்ணீர் வெகுவாக உயர்ந்து இருக்கும். கடந்தாண்டு பெய்த தென்மேற்கு மற்றும் பருவமழையால், பெரும்பாலான தடுப்பணைகளில் தண்ணீர் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக  மழையின்றி  வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் தண்ணீர் சேமிப்பதற்காக அமைக்கப்பட்ட பல தடுப்பணைகள் வறண்டு காணப்படுகிறது. தை பட்டத்தை எதிர்நோக்கி, விளைநிலங்களில் மானாவாரி மற்றும் காய்கறி பயிர்களை பயிரிட விவசாயிகள் தயாராகி வரும் நிலையில், மழை இல்லாததால் விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து கோடை மழை பெய்தால் ஓரளவு விவசாய நிலம் செழிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். தை பட்டத்தை எதிர்நோக்கி, விளைநிலங்களில் மானாவாரி மற்றும் காய்கறி பயிர்களை பயிரிட விவசாயிகள் தயாராகி வரும் நிலையில், மழை இல்லாததால் விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: