டெல்லி வன்முறை விவகாரத்தில் மவுனம் கலைத்தார் பிரதமர் : தலைநகரில் அமைதியை நிலைநாட்ட சகோதர, சகோதரிகள் ஒத்துழைக்க மோடி வேண்டுகோள்

டெல்லி: டெல்லி மக்கள் அமைதியையும் சகோரத்துவத்தையும் காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைதியும் நல்லிணக்கமும் நமது சமுதாயத்தின் அடிப்படை கொள்கைகளாகும் என டிவிட்ட்ர் பிரதமர் மோடி கருத்து தெரித்துள்ளார்.

பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், மெளஜ்பூர், பிரம்மபுரி, சீலாம்புரி, கோகுல்புரி, கஜோரி காஸ், பஜன்புரா பகுதிகளில்  நடைபெற்ற போராட்டங்களில் திடீர் வன்முறை வெடித்தது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பார்களும் மோதிக் கொண்டனர். பல இடங்களில் வாகனங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை சேதபடுத்தப்பட்டதுடன், தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டன.இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி டீவீட்

இந்நிலையில் டெல்லியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், டெல்லியின் நிலவரம் குறித்து விரிவான அளவில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.டெல்லியில் அமைதியை கொண்டு வர போலீஸ் மற்றும் இதர துறையினர் பணியாற்றி வருகின்றனர்.அமைதி மற்றும் நல்லிணக்கம் இந்தியாவின் ஆன்மா என்பதை மறந்துவிட வேண்டாம்.அமைதியும், நல்லிணக்கமுமே நமது நெறிமுறைகளுக்கு மையப்புள்ளி; விரைவில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப டெல்லியில் வாழும் சகோதர, சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: