இந்தியாவுக்கு 84-வது இடம்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

சமீபத்தில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு 84 வது இடமே கிடைத்துள்ளது. இந்தியா பெற்ற ஸ்கோர் 58.  அதாவது இந்தியாவின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 58 நாடுகளுக்குச்  செல்ல முடியும். தொடர்ந்து  சில வருடங்களாக ஜப்பானின் பாஸ்போர்ட் முதல் இடத்தில் உள்ளது.  

ஜப்பானின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். உலகின் மோசமான பாஸ்போர்ட்டாக  ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் கருதப்படுகிறது. ஜப்பானுக்கு அடுத்து சிங்கப்பூர் பாஸ்போர்ட்டில் 190 நாடுகளுக்கும், ஜெர்மனி, தென்கொரியா  பாஸ்போர்ட்டில் 189 நாடுகளுக்கும் விசா இல்லாமல் செல்ல முடியும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்தியா இரண்டு ரேங்க் பின்  தங்கிவிட்டது.

Related Stories: