5 வயதில் 14 நாடுகளைச் சுற்றிய குழந்தை!

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

உலகம் முழுவதையும் சுற்ற வேண்டும் என்பது பலரது கனவு. இந்தக் கனவு பலருக்கும் கனவாக மட்டுமே நின்று போகிறது. நிஜத்தில் ஒரு சிலர்  மட்டுமே கனவை நனவாக்குகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 5 வயது செலின் 6 கண்டங்களைப் பார்த்துவிட்டார்.  பிறந்து 9 மாதத்  தில் முதல் விமானப் பயணத்தை ருசித்த செலின், உலகின் முக்கிய 14 நாடுகளையும் அதிலுள்ள 42 நகரங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டார்.

நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விமானங்களில் சுமார் 2.5 லட்சம் மைல் தூரம் பயணித்திருக்கிறார் செலின், விமானப் பயணத்தின் போது  வானவில்லை வரைவது அவரது பயணப் பொழுதுபோக்கு. செலினுடன் பெற்றோரும் பயணித் திருக்கின்றனர். வருங்காலத்தில் தங்களது மகள்  தனியாகவே உலகைச் சுற்றுவாள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் செலினின் தாய்.

Related Stories: