பிட்ஸ்

டைனோசர்கள் இந்த  பூமியை 14 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் ஆண்டிருக்கின்றன. பொதுவாக நட்சத்திர மீன்களுக்கு 5 கைகளே காணப்படும். சில  வகைகளுக்கு மட்டும் 50 கைகள்!கழுகின் கண்கள் தலையின் பக்க வாட்டில் இருந்தாலும்கூட, அதனால் நேராகவும் பார்க்க முடியும்.லீஃப்’ என்ற பூச்சி  இலங்கையில் காணப்படுகிறது. இலைகளைப் போலவே காணப்படும் இப்பூச்சி இடும் முட்டைகள்கூட விதைகள் போலவே காணப்படும். ‘டிராகன்  ஃப்ளை’ என்ற பூச்சி தன் கால் களைக் கோர்த்து, அதை ஒரு வாளிபோலப் பயன்படுத்தி மற்ற பூச்சிகளைப் பிடிக்கும். பறக்கும்போதே தின்னும்.  இதுவரை அறியப்பட்ட அடிப்படையில் கங்காருவின் அதிகபட்ச தாவல் 40 அடி!எலிகள் பொதுவாக ஆண்டுக்கு 50 குட்டிகள் வரை இனப்பெருக்கம்  செய்கின்றன.

30 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் மிகப்பழமையான உயிரினமான கரப்பான் பூச்சி, இதுவரை தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை.  யூகலிப்டஸ் மரங்கள் கோலா கரடிக்கு உணவு மட்டுமல்ல... அதன் முழுமையான தண்ணீர் தேவையையும் நிறைவு செய்கின்றன! 5 அடி நீளமுடைய  ஆஸ்திரேலிய டைகர் பாம்பின் விஷம்தான் உலகிலேயே மிகக் கடுமையானது. அதன் விஷச்சுரப்பியிலுள்ள விஷம், ஒரே சமயத்தில் 300 ஆடுகளைக் கொன்றுவிடும்.

Related Stories: