லெகோ சிற்பம்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது லெகோ பிளாஸ்டிக் துண்டுகள். குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற் கான ஒரு பொருளாகவும்  லெகோ பிளாஸ்டிக் துண்டுகள் இருந்து வருகின்றன. குழந்தைகள் தங்களின் கற்பனை மூலம் லெகோ துண்டுகளை இணைத்து பொம்மைகளையோ  பொருட்களையோ உருவாக்குவார்கள். இது மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு கற்பனை வளத்தையும் செழுமையாக்குகிறது. இந்த லெகோ  துண்டுகளை வைத்து மனித உருவங்களைச் சிற்பமாக உருவாக்குகிறார் நாதன் சவாயா.

முப்பரிமாண சிற்பங்களுக்கு பேர் போன நாதன் லெகோ பிளாஸ்டிக் துண்டுகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இவரிடம் 15 லட்சம் லெகோ துண்டுகள் இருக்கின்றன. உலகிலேயே அதிகமாக லெகோ துண்டுகள் வைத்திருக்கும் மனிதரும் இவர்தான். லெகோவின் சிற்பங்கள் உலகின்  பெருநகரங்களில் நடக்கும் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அப்ளாஸை அள்ளுகின்றன.

Related Stories: